யாழ்ப்பாணம் சுழிபுரம் – மூளாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதான தயாபரன் முரளிவாசன் என்பவர், போதைக்கு அடிமையான நிலையில்தான் துயரமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் (6) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவது, அவர் தனது சகோதரியிடம் போதைப்பொருளுக்காக பணம் கேட்டபோது சகோதரி மறுத்ததையடுத்து மனவேதனைக்குள்ளாகி வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு உயிர் மாய்த்ததாகும்.
இச் சம்பவத்தையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் விசாரணைகளை முன்னெடுத்தார். மேலும் வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பாக சாட்சிகளைப் பதிவு செய்துள்ளனர்.
