கடமையிலேயே போதை மாத்திரைகளுடன் கைது — அதிர்ச்சி சம்பவம்!

ஹோமாகமப் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து மொத்தம் 150 மில்லி கிராம் எடையுடைய ஐந்து போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று இரவு 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பணியில் இருந்ததுடன், அவர் பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி பிரிவில் கடமையாற்றி வந்தார்.

ஆனால், உரிய நேரத்தில் கடமையில் சமூகமளிக்காத அவர் இரவு 11 மணியளவில் நிலையத்திற்குத் திரும்பியபோது, பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் போதை மாத்திரைகள் அவரது வசம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

தற்போது சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *