பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார், அமெரிக்கா வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திலும் ஊழல் தொடர்ந்து நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் லங்காசிறி தொலைக்காட்சியின் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் போதே இந்த கருத்துகளை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“2025ஆம் ஆண்டிற்கான அமெரிக்காவின் இலங்கை தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் அதில் உள்ள தகவல்கள் இலங்கைக்கு சாதகமானவை அல்ல. தற்போதைய நிலையில் ஊழல் நீங்காததால், இலங்கை வெளிநாட்டு முதலீட்டுக்கு ஏற்ற நாடாக பார்க்கப்படவில்லை. மேலும், சில துறைகளில் இலங்கை மீது புதிய தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
இந்த முக்கிய விடயங்களை விரிவாக அலசி ஆராயும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி தற்போது நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.
