விமான நிலையத்தில் பத்து லட்சம் மதிப்புள்ள மதுபானக் கடத்தல் முயற்சி; ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில், தீர்வையற்ற விற்பனை நிலையங்களில் இருந்து பத்து இலட்சம் ரூபா மதிப்புள்ள 75 வெளிநாட்டு மதுபானப் போத்தல்களை வாங்கி வெளியே கொண்டு செல்ல முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பயணி அல்லாத இந்த சந்தேக நபர், கிரீன் கேட் வழியாக மோசடியான முறையில் வெளியில் எடுக்க முயன்ற போதே, விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு போலீசார் அவரை சிக்கவைத்தனர். கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *