வடமாகாண எரிபொருள் நிரப்பு நிலைய முகவர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்று (30) நள்ளிரவு 12 மணி முதல் எரிபொருள் விலைகள் மீள்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய,
- LP92 – ரூ. 299
- LAD – ரூ. 277
- LP95 – ரூ. 335
- LSD – ரூ. 313
- LK – ரூ. 180
என நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூட்டுத்தாபன சந்தைப்படுத்தல் தலைமைக் காரியாலயம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் புதிய விலைக்கமைவாக எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
