முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாசார ஆடையில் கல்வி கற்கும் உரிமை: பிரதமருக்கு பெண்கள் அமைப்பின் நன்றிச் கடிதம்

முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசார ஆடையில் நாட்டிலுள்ள எவ்வொரு பள்ளியிலும் கல்வி தொடர முடியும் என பிரதமர் ஹரினி அபயசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என வுமென்ஸ் கோப்ஸ் – ஸ்ரீ லங்கா (Women’s Corps – Sri Lanka) தலைவி நிகாஸா ஷர்பீன் தெரிவித்தார்.

அவர் பிரதமருக்கு அனுப்பிய நன்றிச் கடிதத்தில், அண்மையில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதானது சமூகத்தில் இன ரீதியாக சிந்திக்கும் நபர்களுக்கு முக்கியமான அடிப்படை நிகழ்வாகும் என்றும், முஸ்லிம் மாணவிகள் மற்றும் தாய்மார்கள் மத்தியில் அரசின் மீதான நம்பிக்கை மற்றும் நன்மதிப்பை பெருக்கியுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அவரது கடிதத்தில் மேலும், “முஸ்லிம் மாணவிகள் கடந்த காலங்களில் கல்வி கற்றலும் பரீட்சை சந்திப்பும் போதும் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியது மறக்க முடியாத ஒன்று. சமூக நன்மைக்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்குகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *