மொனராகலையில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய் வேலைக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தந்தையின் அச்சுறுத்தலுக்கு சிறுமி உள்ளாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு ஏற்பட்ட உடல் உபாதை காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றபோது, தந்தையின் அருவருப்பான செயல் வெளிப்பட்டது. இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, 38 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தந்தையுடன் மற்றும் சகோதரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், துஷ்பிரயோகம் காரணமாக சிறுமியின் உடல் உறுப்புகளில் தீவிர காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
