பொதுமக்களுக்கு அவசர சூழ்நிலைகளில் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் பொலிஸ் திணைக்களம் புதிய துரித அழைப்பு இலக்கங்களை அறிவித்துள்ளது.
இதுவரை பயன்படுத்தப்பட்ட 119 இலக்கத்துடன் கூடுதலாக, முறைப்பாடுகள் மற்றும் தகவல்கள் வகைப்படுத்தப்பட்டு கீழ்க்கண்ட எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
- பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அறிவிக்க: 109
- குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்க: 119
- ஏதேனும் சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் தமிழில் தகவல் வழங்க: 107
- பொலிசார் மேற்கொள்ளும் மோசடிகள், இலஞ்சம் கோரல் தொடர்பான தகவல்களை வழங்க: 1997
பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பிற்கும் நீதி நிலைநாட்டவும் இத்தகவலை பயன்படுத்துமாறு பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
