ஜப்பான் நிதி அமைச்சருடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முக்கிய பொருளாதார கலந்துரையாடல்

ஜப்பான் உத்தியோகபூர்வ விஜயத்தில் உள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் ஜப்பான் நிதி அமைச்சர் கதோ கசுனொபுவும் நேற்று (29) டோக்கியோ இம்பீரியல் விடுதியில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதேசமயம், ஜப்பானின் உதவி மற்றும் ஒத்துழைப்பின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் தொடங்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்தும் சிறப்பான கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, பொருளாதார சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *