கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள்: மானியங்கள் ஆணைக்குழு தலைவர் செயல்பாட்டை கண்டித்து பணிப்புறக்கணிப்பு தொடக்கம்

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (TAEU) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரட்ணவின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து 2025 செப்டம்பர் 29 முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கிறது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, பட்டமேற்கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதி முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட பணியிடம் இல்லாத நிலையில் நீக்கப்பட்டார். எனினும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் மற்றொரு பீடாதிபதி அங்கீகரிக்கப்படாத பணியிடத்திலும் பதவியில் தொடர அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஜூன் 20 முதல் அந்த பீடாதிபதிக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியிடம் இருந்தும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அரசியல் நோக்கங்களுக்காக நியமனத்தை தாமதப்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு அசௌகரியங்கள் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *